×

foodies விரும்பும் வி.வி.புரம் தெரு: பெங்களூரின் மாடர்ன் உணவுக் கலாச்சாரம்

பெங்களூர் கே.ஆர் மார்க்கெட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வி.வி.புரம் தெரு. பகலில் அது ஒரு சாதாரண தெரு. ஆனால் மாலை ஆறு மணி ஆனதும்  சாலையோரம் முழுக்க உணவகமாக  புதிய உருவம் எடுக்கிறது. தென் இந்தியாவிலேயே சமகாலத்தில் வக்கனையாக உணவகத்தை தேடி சாப்பிடும் பழக்கம் உள்ள மக்கள் வசிக்கும் ஊரு பெங்களூர். ஐடி வாசிகள், குறிப்பாக சைவ உணவுகளில் அதிக வெரைட்டி கிடைக்கும் என்றே சொல்லலாம்.  150 மீட்டர் நீளமும் 50 அடி அகலமும் கொண்ட தெரு. இரவு பதினோரு மணிவரை இயங்கும் உணவகங்கள்.அதன் முன்னால் முண்டியடிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள். இட்லி முதல் பாவ்பாஜி வரை இந்திய சைவ உணவுகள் எல்லாம் இங்கே கிடைக்கின்றன. சர்க்கரைவள்ளி கிழங்கு, வித்தியாசமான குச்சி ஐஸ், விதவிதமான மிட்டாய் வகைகள் கிடைக்கின்றது.  இதுவரை கேள்விப்படாத பெங்களூரின் பூர்வீக உணவுகள். இதுவரை  பார்த்தே இராத  வட மாநிலங்களில் உட்கிராமங்களில் தயாரிக்கக் கூடிய ஸ்பெஷல் பாரம்பரிய உணவுகள் கிடைக்கின்றது. காங்கிரஸ் பன் உள்ளே உலர் பழங்கள், நட்ஸ் வகைகளை வைத்து ஸ்டநஃப் செய்து தருகின்றார்கள். இங்கு விற்கப்படும் தம்ரூட் அல்வாவும் புகழ்பெற்றது. இங்கே சாதாரண கல்தோசையில் தொடங்கி,நீர் தோசா,தாபனகரா பென்ன தோசா என வெரைட்டிகள் கிடைக்கின்றது. கூடவே கெட்டிச்சட்டினி, தண்ணிச் சட்டினி, காரச்சட்டினி தருகிறார்கள். சாம்பார் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அடுத்தது அக்கி ரொட்டி என்கிற அரிசி ரொட்டியும் குருமாவும். பானிபூரியில் கூட வித்தியாசம் காட்டுகிறார்கள் இங்கே. அதற்கு பெயர் பங்கார் பேட் பேகம் பானி பூரி. வழக்கமான புளித்தண்ணீரும், காரச்சட்டினியும் இல்லாத பெங்களூர் ஸ்பெஷல் இது. இன்னும் ரஷ்யன் கட்லெட், உள்ளே நூடுல்ஸ் வைத்துச் செய்த சைனீஸ் சமோசா, ஹனி கேக் என்று சைவ வெரைட்டியில் கலக்குகின்றார்கள் ‘ஃபயர் பான்’ என்கிற எரியும் பீடா!. உங்கள் கையைவிட அகலமான வெற்றிலையில்,பீடாவை அவர்களே மடித்து,அதன் தலையில் தீயைவைத்து உங்கள் வாய்க்குள் போட்டுவிடுகிறார்கள். பயப்படாதீர்கள் ஒன்றும் ஆகாது. வித்தியாசமான ‘ட்ராகன் பிரீத்’!, சைனீஸ் மிளகு, பூண்டு போன்ற  மூலப்பொருட்களை கலந்து தயாரிக்கின்றார்கள். அதை வாங்கி வாயில் போட்டு ஊதினால் வாய்குள் இருந்து புகை வருகிறது. ஒரு சிறிய பிளாஸ்டிக் தட்டின் மேல் துண்டு வாழை இலையைப் போட்டு,அதில் இரண்டு ஸ்பூன் ரோஜா குல்கந்தைப் பரப்பி விட்டு, அதன் மேல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாழைபழம் தூவி, ஒரு கரண்டி ஐஸ்கிரீம் வைக்கிறார்கள். அதில் மேலும் சில பழத்துண்டுகள் தூவித் தருகிறார்கள். வி.வி தெருவுக்குப் போகும் போது இந்த ‘டெஸர்ட்’ நினைவில் இருக்கட்டும். இந்தியாவின் முக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் பட்டியலை எடுத்தால், அதில் நிச்சயம் பெங்களூர் வி.வி புரம் தெருக்கள் முதன்மை இடத்தை பிடிக்கும். கிட்டத்தட்ட பல கிலோமீட்டர் தூரம் நீளுகின்றது உணவுச்சங்கிலியாக.தொகுப்பு:- திலீபன்

The post foodies விரும்பும் வி.வி.புரம் தெரு: பெங்களூரின் மாடர்ன் உணவுக் கலாச்சாரம் appeared first on Dinakaran.

Tags : CV Puran Street ,Bangalore ,Bangalore K. ,R Market ,CV ,CV Puram Street ,
× RELATED ரேவண்ணா மீதான வழக்கில் புதிய திருப்பம்